17 வயது சிறுமியை தாயாக்கிய 12 வயது சிறுவன்; போக்சோ சட்டத்தில் கைது

தஞ்சாவூர் அருகே 17 வயது சிறுமியை தாயாக்கிய 12 வயது சிறுவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Update: 2022-04-22 01:38 GMT
தஞ்சாவூர்:

தஞ்சையை சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதியினருக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். சிறுமியின் உடல் நிலையில் திடீரென சில மாற்றம் ஏற்பட்டது. இதுபற்றி பெற்றோர் கேட்டபோது அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அவருடைய பெற்றோர் தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. திருமணம் ஆகாத நிலையில், சிறுமிக்கு குழந்தை பிறந்த சம்பவம் டாக்டர்களுக்கு தெரியவந்தது.

இதையடுத்து டாக்டர்கள், தஞ்சை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியிடம் விசாரித்தனர். 

விசாரணையில், பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வரும் பக்கத்து வீட்டை சேர்ந்த 12 வயது சிறுவன் தன்னுடன் நெருக்கமாக பழகியதாகவும், இதில் தான் கர்ப்பமானதாகவும் சிறுமி கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் 12 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்