கல்வராயன் மலையில் சூறைக் காற்றுடன் கனமழை - 50 ஏக்கர் வாழைகள் சேதம்...!

கல்வராயன் மலை சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக் காற்றுடன் பெய்த கனமழையால் 50 ஏக்கர் வாழைகள் சேதம் அடைந்து உள்ளது.

Update: 2022-04-18 11:15 GMT
கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தி உள்ள மட்டபாறை, மாயம்பாடி, கல்படை, பொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை, பாக்கு,  சோளம்,  போன்ற பயிர்களை விவசாயிகள் அதிக அளவில் பயிர் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கல்வராயன் மலை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் இருந்து விடியற்காலை வரை பலத்த  சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது.

இதனால் அந்த பகுதியில் 50 ஏக்கருக்கும் மேல் விவசாயம் செய்திருந்த வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்கள் காற்றில் சாய்ந்து சேதமடைந்தது.

அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் காற்றில் சேதமடைந்ததால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது.  இத்தகைய இழப்பிட்டுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்

மேலும் செய்திகள்