கோடை வெப்பம்; சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை- தமிழக அரசு பரிசீலனை...!
தற்போது மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சென்னை
கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக கடந்த மார்ச் 2020 முதல் மூடப்பட்ட பள்ளிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு படிப்படியாக திறக்கப்பட்டு தற்போது முழுவீச்சில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோடைகால வெப்பத்தின் தாக்கம் கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகின்றன. பல மாவட்டங்களின் வெப்பத்தின் அளவு சதத்தை பதிவு செய்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.