புதுவண்ணாரப்பேட்டையில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை

புதுவண்ணாரப்பேட்டையில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-04-17 18:59 GMT
திருவொற்றியூர்,

சென்னை தண்டையார்பேட்டை தண்டையார் நகரைச் சேர்ந்தவர் ஜீவன்குமார்(வயது 26). ரவுடியான இவர் மீது போலீஸ் நிலையங்களில் 6 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது.

நேற்று இரவு 9.30 மணியளவில் ஜீவன்குமார், புதுவண்ணாரப்பேட்டை தியாகி பெருமாள் சாலை கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை சுற்றி வளைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜீவன்குமார், அவர்களிடம் தப்பி ஓடினார்.

வெட்டிக்கொைல

ஆனால் அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி ஜீவன்குமாரை சரமாரியாக வெட்டியது.. இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஜீவன்குமார், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனடியாக அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், 108 ஆம்புலன்சில் ஏற்றி ஜீவன்குமாரை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜீவன்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜீவன்குமார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால்தான் ஜீவன்குமார் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்