ரெயிலில் அடிபட்டு காவலாளி பலி

தண்டவாளத்தை கடக்க முயன்றபோது முதியவர் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-04-13 17:58 GMT
புதுவை நெல்லித்தோப்பு கஸ்தூரிபாய் நகர் ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 57). தனியார் நிறுவன காவலாளி. இவர் மனைவி குளோரியாவுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனியாக வசித்து வந்தார். நேற்று காலை மதியழகன் அந்த வழியாக சென்ற ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்