#லைவ் அப்டேட்ஸ்: மாநகராட்சி பட்ஜெட்: சென்னையில் குளங்கள் ரூ.143 கோடியில் மேம்படுத்துப்படும்

சென்னையில் குளங்கள் ரூ.143 கோடியில் மேம்படுத்துப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-04-09 06:03 GMT
சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியின் வரவு-செலவு கணக்கான ‘பட்ஜெட்’ இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ‘பட்ஜெட்டுக்கான’ கூட்டம் சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்துக்கு பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமை தாங்கினார். 

துணை மேயர் மு.மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கலின்போது  திருக்குறள் வாசித்து மாமன்ற உரையை மேயர் ஆர்.பிரியா துவங்கினார். 

இதனிடையே சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, சொத்து வரி உயர்வு குறித்து விவாதிக்க வலியுறுத்தி அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

12:40  PM

* 70 பள்ளிகளுக்கு ரூ.1.86 கோடியில் இணையதள இணைப்பு

சென்னைவாசிகள் விரைவில் தொழில்துறை வரி செலுத்தி, நம்ம சென்னை செயலி மூலம் கட்டிட அனுமதி பெறலாம்.

சென்னை மாநகராட்சி குப்பைகளை சேமிக்க பேட்டரியில் இயங்கும் 795 வாகனங்களை வாங்க உள்ளது.

மறுசுழற்சி செய்ய முடியாத 2,600 மெட்ரிக் டன் குப்பைகளை பதப்படுத்தி, சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்புவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

54,000 மெட்ரிக் டன் தேங்காய் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும்.

மாதவரத்தில் பயோ கேஸ் ஆலை விரைவில் திறக்கப்படும்.

தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்திற்கு 1,200 மெட்ரிக் டன் உரம் ஆண்டுக்கு விற்பனை செய்யப்படும்.

11:40

* சென்னை மாநகர் முழுவதும் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும் -சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு  

* சென்னை மாநகராட்சியில் e-office அறிமுகப்படுத்தப்படும். இதன் வாயிலாக வரும் காலங்களில் பொதுமக்களுக்கான சேவைகள் காலதாமதமின்றி விரைவாக செய்து முடிக்க இயலும் என அறிவிக்கப்பட்டுள்ளது

* தன்னார்வலர்கள் உதவியுடன் அனைத்து சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* சென்னையில் குளங்களை மேம்படுத்தும் பணி, ரூ.143 கோடி மதிப்பீட்டில், இந்திய அரசின் அம்ருட் 2.0 திட்ட நிதியிலிருந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

1  மணலி ஏரி
2 சாத்தாங்காடு குளம்
3 சடையன் குப்பன் குளம்
4 மாதவரம் பெரிய ஏரி
5 அண்ணா நெடுஞ்சாலை குளம்.

11:20

* சென்னை மாநகராட்சியில் புதிதாக மூன்று டயாலிசிஸ் மையங்கள் தொடங்கப்படும்; படிப்படியாக அனைத்து மண்டலங்களில் டயாலிசிஸ் மையங்கள் ஏற்படுத்தப்படும்.

* மாற்றுத்திறனாளிகளுக்காக கடற்கரையில் நிரந்தர பாதை அமைக்கும் பணிக்கு ரூ.1.14 கோடி பெறப்பட்டுள்ளது; இந்த பணிகள் துவங்கப்பட்டு 2 மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டும்.

* 2011 கணக்கின்படி, சென்னையில் 66.72 லட்சமாக இருந்த மக்கள் தொகை தற்போது 88 லட்சமாக அதிகரிப்பு.

* டிஜி லாக்கரிலிருந்து வர்த்தகர்கள் வர்த்தக உரிமைகளை பதிவிறக்கம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும்.

11:10

* சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 40.80 கி.மீ நீளத்திற்கு 184.67 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.

* நேர்மையான சிந்தனைகளை உருவாக்க பள்ளிகளில் பாலின குழுக்கள் அமைக்கப்படும்

* சென்னையில் வார்டு மேம்பாட்டு நிதி ரூ. 30 லட்சத்தில் இருந்து ரூ. 35 லட்சமாக அதிகரிப்பு

* 200 வார்டுகளுக்கு ரூ. 70 கோடி ஒதுக்கீடு.

* சொத்து வரி உயர்வு குறித்து விவாதிக்க வலியுறுத்தி அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு

* சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் 

மேலும் செய்திகள்