பெண்களை கிண்டல் செய்த 5 வாலிபர்கள் கைது

பெண்களை கிண்டல் செய்த 5 வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-08 18:49 GMT
புதுச்சேரி லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் ஆதிதிராவிடர் பெண்கள் விடுதி அருகில் 3 வாலிபர்கள் நின்று கொண்டு அந்த வழியாக சென்ற பெண்களை பாட்டு பாடி கிண்டல் செய்து கொண்டிருந்தனர். அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வினோபா நகரை சேர்ந்த பிரவீன் (வயது 25). பத்மநாபன் (25), கிருஷ்ணாநகரை சேர்ந்த விக்னேஷ் (22) என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 
இதேபோல் நெல்லித்தோப்பு மார்க்கெட் பகுதியில் பெண்களை கிண்டல் செய்த ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (25), பிருந்தாவனம் பகுதியை சேர்ந்த சூர்யா (22) ஆகியோரை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்