அரசியல் தலைவர்கள் உட்பட யாரையும் இழிவுபடுத்தும் வகையில் செயல்படக்கூடாது - ரசிகர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

அரசியல் தலைவர்கள் உட்பட யாரையும் இழிவுப்படுத்தும் வகையில் செயல்படக்கூடாது என ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்

Update: 2022-04-07 01:09 GMT
சென்னை 

அரசியல் தலைவர்கள் உட்பட யாரையும் இழிவுபடுத்தும் வகையில் செயல்படக்கூடாது என ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து  விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;

அரசு பதவிகளில் உள்ளோர்களை  ,அரசியல் கட்சி தலைவர்களை மற்றும் யாரையும் ,எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிக்கைகளில் ,இணையதளங்களில் போஸ்டர்களில் என எந்த தளத்திலும்  
 எழுதவோ  ,பதிவிடவோ மீம்ஸ் உள்ளீட்டை எதனையும் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது 

விஜய் அவர்களின் அறிவுறுத்தலை யாரேனும் மீறினால் அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு , அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை விஜய் ,அவர்களின்  உத்தரவின் பேரில்  இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது 

மேலும் செய்திகள்