சீமைக்கருவேல மரங்கள் 10 ஆண்டுகளில் முழுமையாக அகற்றப்படும்
சீமைக்கருவேல மரங்கள் 10 ஆண்டுகளில் முழுமையாக அகற்றப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடக்கோரி ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த முறை நடந்த விசாரணையின்போது சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான கொள்கையை வகுக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அவகாசம் வேண்டும்
அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ‘‘தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக வரைவு கொள்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இறுதி கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க 8 வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும்.
தற்போதும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. சுமார் 700 ஹெக்டேர் பரப்பில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை அகற்றும் பணி நடந்து வருகிறது’’ என்று கூறினார்.
10 ஆண்டுகளில்...
இதற்கிடையில், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சார்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
700 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் முன்னோடி திட்டத்துக்காக ரூ.5.35 கோடி ஒதுக்குவதற்கு நிதித்துறை செயலர் ஒப்புதல் அளித்துள்ளார். முதற்கட்டமாக ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதிகளிலும், தர்மபுரி மாவட்ட பகுதிகளிலும் 200 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள அன்னிய மரங்கள் அகற்றப்படும். குறிப்பாக சீமைக்கருவேல மரங்களை 10 ஆண்டுகளில் படிப்படியாக முழுமையாக அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
196 வகைகள்
அதற்கு அடுத்த 5 ஆண்டுகளில் சீமைக்கருவேல மரங்கள் மீண்டும் வளராமல் கண்காணிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 196 வகையான அன்னிய மரங்கள் பரவியுள்ளது. இதில் சீமைக்கருவேலம் உள்ளிட்ட 23 வகையான மரங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டியவை என முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இதையடுத்து நீதிபதிகள், சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு இறுதி கொள்கை முடிவு எடுக்க 8 வாரங்கள் அவகாசம் வழங்குகிறோம். இந்த வழக்கு விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு தள்ளி வைக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.