தூத்துக்குடி: உடன்குடியில் சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம்....!

உடன்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-04-04 10:15 GMT
உடன்குடி,

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும்,முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி உடன்குடி பேரூராட்சி திடலில் சிவசேனா கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்  சிவசேனா கட்சியை சேர்ந்த பல்வேறு தொண்டர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது. தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்