உடல்நலம் குறித்து விசாரித்த முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி - சீமான் டுவீட்

உடல்நலம் குறித்து விசாரித்த முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து சீமான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Update: 2022-04-03 11:10 GMT
கோப்புப் படம்
சென்னை

திருவெற்றியூரில் அண்ணாமலை நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு பகுதிகளை இடிப்பதை கண்டித்து நடந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு சென்றார்.  

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது திடீரென சீமான் மயங்கி விழுந்தார். உடனே ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு சென்ற சிறிது நேரத்தில் அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார். இதையடுத்து முழு உடல் பரிசோதனைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார்.

சீமானிடம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்த நிலையில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் உடல்நலம் குறித்து விசாரித்த முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'எனது உடல்நலம் குறித்து அலைபேசியில் அழைத்து அக்கறையுடன் விசாரித்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்!' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்