2 ஆண்டுகள் கழித்து தஞ்சை பெரியகோவில் தேரோட்டம் - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
தஞ்சை பெரிய கோவிலில் வருகிற 13 ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.;
தஞ்சாவூர்,
தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 13 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுவதை ஒட்டி தஞ்சாவூருக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில், அடுத்த மாதம் 14 ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தேரோட்டமானது இந்த ஆண்டு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.