வேன் மோதி சிறுவன் இறந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நோட்டீஸ்
வேன் மோதி சிறுவன் இறந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.;
சென்னை,
சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளி வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவர் தீக்சித் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீசார் தடயங்கள் மற்றும் ஆதாரங்களைச் சேகரித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் வேன் ஓட்டுநர் பூங்காவனம் மற்றும் பெண் ஊழியர் ஞானசக்தி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், வேன் மோதி சிறுவன் இறந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விபத்து குறித்த 10 கேள்விகளுக்கு 2 நாட்களில் விளக்கம் அளிக்கும்படி பள்ளி தாளாளருக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.