திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல் - பக்தர்கள் அச்சம்
திருச்செந்தூரில் திடீரென கடல் உள்வாங்கியதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அச்சம் அடைந்தனர்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலையொட்டிய கடல் பகுதி திடீரென உள்வாங்கியது. இதனால் தண்ணீருக்கு அடியில் இருக்கும் பாறைகள், புல்வெளிகள் வெளியே தெரிந்தன. இதனையடுத்து கடல் பகுதியில் கிடைக்கக்கூடிய சிப்பி, சங்குகளை பக்தர்கள் சேகரித்து வீட்டிற்கு கொண்டு சென்றனர்.
அமாவாசை என்பதால் கடல் நீர் உள்வாங்கியதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு ஓரிரு நாட்கள் முன்பாகவோ அல்லது பின்னரோ திருச்செந்தூர் பகுதியில் கடல் உள்வாங்குவதும், சீற்றத்துடன் முன்னேறுவதும் வாடிக்கையாக நடைபெறும் நிகழ்வாக உள்ளது.