அண்ணா விருது பெற்ற ஒருவர் தன்னை ஒருமையில் பேசியதாக தமிழிசை சவுந்தரராஜன் வேதனை
அண்ணா விருது ' பெற்ற ஒருவர் தன்னை ஒருவர் ஒருமையில் திட்டுவதாக தமிழிசை சவுந்தரராஜன் வேதனையுடன் குறிப்பிட்டார்.
திருச்சி,
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் திருச்சி வந்தார்.
அப்போது திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது,
கொரோனா இன்னும் முழுமையாக போகவில்லை. பல்வேறு நாடுகளில் நோய் தொற்று அதிகரிக்க துவங்கியுள்ளது. அதனால் பொதுமக்கள் அஜாக்கிரதையாக இல்லாமல் முக கவசம் மற்றும் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் தொற்றை கட்டுப்படுத்த வேண்டும்
4 வது அலை வருவதற்கும் வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் நான்காவது வரக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன். 12 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கு கேட்கத் தெரியாது. அவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். 60 வயது மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
நான்காவது அலை வருவதை தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை பொதுமக்கள் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் நூற்றாண்டு நினைவு கருத்தரங்கம் நடைபெற்றது. அதனை தொடங்கி வைத்துப் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தன்னை ஒருவர் ஒருமையில் திட்டியதை வேதனையுடன் குறிப்பிட்டார்.
விழாவில் பேசிய தமிழிசை, இரண்டு மாநிலத்தில் அவள் கவர்னராக இருக்கிறாள் என்று ஒருவர் சொன்னார். இரண்டு மாநிலங்களுக்கு கவர்னராக இருப்பது எவ்வளவு சிரமமான காரியம். அதிலும் தமிழச்சி ஒருவர் இரண்டு மாநிலங்களுக்கும் கவர்னராக இருப்பதைப் பார்த்து ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும்.
துரதிஷ்ட வசமாக ஒருவர் என்னை ஒருமையில் பேசுகிறார். பேரறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர், இவளெல்லாம் இரண்டு மாநிலங்களுக்கு கவர்னரா? என்று கேட்கிறார். தயவு செய்து யாரையும் திட்டுவதாக இருந்தாலும் கூட மரியாதையாக அழகுத்தமிழில் திட்டுங்கள்.
என் தமிழுக்கு மரியாதை உண்டு மரியாதையாக பேசவில்லை என்றால் நீங்கள் தமிழரே இல்லை என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.