மே 10 வரை தமிழக சட்டசபை கூட்டத்தொடர்..!
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் மே 10 வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தின் 16-ஆவது சட்டசபை முதல் கூட்டத் தொடா் சென்னை கலைவாணா் அரங்கத்தில் திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கியது. முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி தொடக்கிவைத்தார். கவர்னர் தனது உரையில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
செவ்வாய், மற்றும் புதன் இரண்டு நாட்களும் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார்.
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதல்-அமைச்சர் பதிலை அடுத்து சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், ஏப்ரல் 6ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்காக ஏப்ரல் 6-ல் சட்டசபை கூடுகிறது. ஏப்ரல் 6-ம் தேதி நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும். அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை மீதான கோரிக்கை விவாதம் நடைபெற்று, மே 10-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 9-ம் தேதி காவல்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. இதுமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துறை என்பதால் இது முக்கியம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்படுகிறது.