தாயின் கள்ளக்காதலனால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை...!

கள்ளக்காதலியின் மகளான 13வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.;

Update:2022-03-29 15:49 IST
அம்பத்தூர்,

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் கே.கே.ரோட்டில் வசித்து வரும் பெண்ணுக்கு, 13வயதில் மகளும், 11வயதில் மகனும் உள்ளனர். இதற்கிடையில், இந்த பெண்ணின் கணவர், குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று கொல்கத்தாவில் வேறு பெண்ணை திருமணம் செய்து வசித்து வருகிறார். இதன் பிறகு, இந்த பெண்ணிற்கு அம்பத்தூர், ஆசிரியர் காலனி, அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த பிஸ்வஜித் (43) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக பிஸ்வஜித், கள்ளக்காதலியின் மகளான 13வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனை அறிந்த, பெண் மகள், மகன் இருவரையும் அழைத்து கொண்டு, கடந்த ஜனவரி மாதம் பட்டாபிராம், தென்றல் நகர் பகுதிக்குச் சென்று ஒரு வீட்டில் குடிபுகுந்துள்ளார்.

இந்நிலையில்,நேற்று காலை பிஸ்வஜித் பட்டாபிராம் வந்து 13வயது சிறுமியை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி தலைமையிலான போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பிஸ்வஜித்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்