பள்ளிக்குழந்தைகளை அளவுக்கு மீறி ஏற்றிச்செல்ல வேண்டாம் - போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல்
விதிகளை மீறுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
பள்ளிக்குழந்தைகளை அளவுக்கு மீறி ஏற்றிச்செல்ல வேண்டாம் என்று ஆட்டோ, வேன், கார் ஓட்டுநர்களுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
மேலும் வாகனம் ஓட்ட சிறார்களை அனுமதிக்க கூடாது என்றும், நாளை முதல் இந்த விதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும், விதிகளை மீறுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சென்னையில் தேர்ந்தெடுத்த 335 பள்ளிகளில் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.