‘இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம்தான்' - அண்ணாமலை
‘இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம்தான்' என்று பட்ஜெட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
சென்னை,
தமிழக பட்ஜெட்டை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழக பா.ஜ.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் வி.பி. துரைசாமி, எம்.என்.ராஜா, சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன், அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, பொதுச் செயலாளர் கருநாகராஜன், எம்.எல். ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி, நயினார் நாகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது அண்ணாமலை பேசியதாவது:-
தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்த கல்விக்கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி இல்லை. பெட்ரோல் விலையில் ரூ.2, டீசல் விலையில் ரூ.4 குறைப்பதாகவும், எல்.பி.ஜி. கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 குறைக்கப்படும் என்றும் தெரிவித்தார்கள். எதுவும் காணோம். பள்ளி கல்வித்துறைக்கு ரூ.36 ஆயிரத்து 895 கோடி ஒதுக்கீடு செய்து இருக்கிறார்கள். இதில், 84 சதவீதம் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளமாக செல்கிறது. எஞ்சிய 16 சதவீதத்தில் இவர்கள் கமிஷன் அடிப்பதற்கான திட்டங்கள் போடப்படும்.
ரூ.36 ஆயிரம் கொடுத்து ஏமாற்றுகிறார்கள்
இல்லம் தேடி கல்விக்கான முழு செலவையும் மத்திய அரசு தனது ‘சமக்ர சிக்ஷா' நிதி மூலமாக தமிழகத்திற்கு கொடுக்கிறது என்பதை மறந்துவிட்டு, இவர்கள் ஏதோ புதிதாக ஒரு திட்டத்தை ஆரம்பிப்பது போல் பேசிக்கொள்கிறார்கள். மத்திய அரசின் ‘ஸ்கில்லிங் இந்தியா' என்ற திட்டத்தின் மூலம் தமிழகத்தில் மட்டும் கடந்த 7 ஆண்டுகளில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 717 பேர் இதன் மூலம் வேலை பெற்று உள்ள நிலையில், ‘நான் முதல்வன்' என்ற திட்டத்தை ஆரம்பித்து 5 லட்சம் இளைஞர்களின் திறனை மேம்படுத்த 50 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளனர். அதன்படி, 1,000 ரூபாயில் ஒரு இளைஞனுக்கு எந்தவிதமான நிர்வாக, ஆளுமை திறனை கொடுக்க முடியும். மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதற்கு உங்களுக்கு என்ன பிரச்சினை.
‘நீட்’ தேர்வுக்கு அரசு அளித்து வந்த பயிற்சியை நிறுத்தி இருக்கிறார்கள். தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 10-ம் வகுப்பு படித்த பெண்கள் 65 ஆயிரம் ரூபாயும், பட்டப்படிப்பு படித்து முடித்த பெண்கள் 90 ஆயிரம் ரூபாயும் பயனடைந்து வந்ததை நிறுத்திவிட்டு, மேற்படிப்பு படிக்கும் பெண்களுக்கு 3 வருடத்திற்கு மாதம் ரூ.1,000 என்ற பெயரில் ரூ.36 ஆயிரம் கொடுத்து ஏமாற்றுகிறார்கள்.
போக்குவரத்து துறை
2,713 பஸ்கள் வாங்குவதற்கு 386 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளனர். இதன் மூலம் ஒரு பஸ்சுக்கு 14 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துவிட்டு, ஒரு பஸ்சுக்கு 40 முதல் 60 லட்சம் ரூபாய் கடன் வாங்கி போக்குவரத்து துறையை கடனில் ஆழ்த்தி உள்ளனர்.
நாங்கள் கடன் வாங்குவதை குறைத்துவிட்டோம் என்று தெரிவித்து இருக்கிறார்கள். 2021-ல் இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம் என்று எதற்காக சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் தெரிவிக்கவில்லை. 6 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் கடனை வாங்கி இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம் என்று ஏன் கூறவில்லை?
தமிழக பட்ஜெட்டை பற்றி கூற வேண்டுமானால், அமைச்சர்களை திருப்தி படுத்துவதற்காக போடப்பட்ட பட்ஜெட் என்று கூறலாம். மாறாக, மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் மத்திய அரசுடன் இணைந்து முழுமையாக 100 சதவீதம் செயல்படுத்தினால், தமிழகம் பட்ஜெட்டே தேவையில்லாத மாநிலமாக மாறிவிடும்.
இவ்வாறு அவர் பேசினார்.