தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் கடைகள் சீல் வைக்கப்படும்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

நீலகிரி, கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்துள்ள வணிக நிறுவனங்களை சீல் வைக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-03-25 11:07 GMT
கோப்புப்படம்
சென்னை,

நீலகிரி, ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற மலையடிவார பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவை அமல்படுத்த கோரிய வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் காணொலி காட்சி மூலமாக ஆஜராகி இருந்தார். அவர் கூறும்போது, மலை பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடுப்பதற்காக அதிகாரிகள் அவ்வபோது ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் வசூலிப்பார்கள். இதுவரையில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. என்று தெரிவித்தார்.

அப்போது பேசிய நீதிபதிகள், வெறும் அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது என்றும், அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்துள்ள வணிக நிறுவனங்களை சீல் வைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவினை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். 

மேலும் செய்திகள்