காரைக்குடி: வழக்கறிஞரின் வீடு புகுந்து வெட்டியதில் 3 பேர் படுகாயம்..!

காரைக்குடி அருகே வழக்கறிஞரின் வீட்டிற்குள் புகுந்து வெட்டிய வழக்கில் தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2022-03-22 10:39 IST
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் குமரகுரு. வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயஸ்ரீ. குமரகுருவிற்கும் அவரது எதிர் வீட்டில் வசித்து வரும் கணபதி குடும்பத்திற்கும் சமீபகாலமாக பிர்ச்சினை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு கணபதி மற்றும் சிலர் குமரகுருவின் வீட்டிற்குள் புகுந்து குமரகுரு மற்ற அவரது மனைவியை வெட்டியதில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். குமரகுருவிற்கு தலை, கைகளில் வெட்டு பலமாக விழுந்துள்ளது. இருவரும் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இதை தடுக்க முயன்ற மாரியப்பன் என்பவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து காரைக்குடி தெற்கு காவல் ஆய்வாளர் மகேஷ்வரி வழக்குபதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்