பங்குனி உத்திர திருவிழா: பழனி மலையடிவாரத்தில் குவியும் முருக பக்தர்கள்...!
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த12 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பழனி,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த12 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள கிரிவீதியில் நடைபெற உள்ளது.
தேரின் வடம் பிடித்து இழுக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையடிவாரத்தில் குவிந்து வருகின்றனர். இதனால் மலைஅடிவாரம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடிக்கு சென்று காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து பக்தர்கள் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
மலையடிவாரத்தில் பக்தர்கள் காவடிகளை சுமந்து வந்து மேளதாளத்துடன் காவடி ஆட்டம் ஆடி திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.