தொலை நோக்கு திட்டம் எதுவும் இல்லாத பகல் கனவு பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது : அண்ணாமலை விமர்சனம்

2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார்

Update: 2022-03-18 10:32 GMT
சென்னை:

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. திருக்குறள் உடன் அவையை தொடக்கி வைத்தார் சபாநாயகர் அப்பாவு.  2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு  தாக்கல் செய்தார்.இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இந்த பட்ஜெட்டில்  பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன

பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் தமிழக பட்ஜெட்'குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறிருப்பதாவது ;

இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் மத்திய அரசின் திட்டங்களை பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது . திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை இன்றும் நிறைவேற்றவில்லை. தொலை நோக்கு திட்டம் எதுவும் இல்லாத ‘பகல் கனவு பட்ஜெட்டாக’ அமைந்திருக்கிறது. 

6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு  உயர்கல்வியினை பயிலும் போது ரூ 1000 வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர்!ஆனால் இது 'பழைய ஆயிரம் ரூபாய் வாக்குறுதி போல் இல்லாமல்’ செயல்படுத்த வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்