சிவகங்கை கல்லல் ஊராட்சி ஒன்றியம் 9-வது வார்டில் மறுவாக்கு எண்ணிக்கை - ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு

சிவகங்கை கல்லல் ஊராட்சி ஒன்றியம் 9-வது வார்டில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-03-15 14:58 GMT
மதுரை,

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியம் 9-வது வார்டில், கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் முறைகேடாக வெற்றி பெற்றதாகக் கூறி திமுக வேட்பாளர் சரஸ்வதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஐகோர்ட் மதுரைக்கிளை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதன்படி கல்லல் ஊராட்சி ஒன்றியம் 9-வது வார்டில், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கறிஞர் மோகன்குமாரை நீதிமன்ற ஆணையராக நியமித்து, அவரது முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனவும், மறுவாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்யவும், ஏப்ரல் 11-ல் அறிக்கை தாக்கல் செய்யவும் ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்