பழனி பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத கடைகளில் மின் இணைப்பு துண்டிப்பு - அதிகாரிகள் நடவடிக்கை
பழனி பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகளில் மின் இணைப்பை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கடைகளை ஒப்பந்தம் எடுத்தவர்கள், சுமார் 5 கோடி ரூபாய் வரை வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதாகவும், இது குறித்து நகராட்சி சார்பில் பலமுறை எச்சரித்தும் வாடகை செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று மாநகராட்சி அதிகாரிகள் வாடகை செலுத்தாக கடைகளின் மின் இணைப்பை அதிரடியாக துண்டித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் 2 நாட்களுக்குள் வாடகையை செலுத்தாவிட்டால், கடையை மூடி சீல் வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.