மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக் கடன் மேளா நடத்த தமிழக அரசு உத்தரவு
மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக் கடன் மேளா நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது . மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாம் , மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு ஆகியவை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் மாத உதவித்தொகையும் தொடர்ந்து அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் வங்கி கடன் மேளா நடத்த அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை சுய தொழில் செய்ய ஊக்குவிக்க வங்கிக்கடன் மேளா நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.