வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது

நெல்லையில் வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-12 23:33 GMT
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் பீடி காலனியை சேர்ந்தவர் அப்துல் ஹாரிக் (வயது 20). இவர் நெல்லை குறிச்சி சக்தி விநாயகர் கோவில் அருகே நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தார். அப்போது பீடி காலனியை சேர்ந்த அப்துல் கனி (25) என்பவர் அரிவாளை காட்டி மிரட்டி அப்துல் ஹாரிக்கிடம் பணம் பறிக்க முயன்று உள்ளார். இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து அப்துல் கனியை கைது செய்தார்.




மேலும் செய்திகள்