அரிவாளுடன் தற்கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது...!

புளியந்தோப்பில் தற்கொலை செய்ய போவதாக அரிவாளுடன் மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-03-10 15:15 GMT
திரு.வி.க நகர், 

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 22). இவர் மீது புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இன்று குடிபோதையில் 2 அரிவாளை வைத்து கொண்டு தன்னை வெட்டி கொள்ளப் போவதாகவும் யாராவது நெருங்கி வந்தால் அவர்களை வெட்டி விடுவேன் என்றும் மிரட்டி பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் புளியந்தோப்பு ஏட்டுகளான சரவணன், சசிகுமார் மற்றும் குமரேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சீனிவாசனை சமாதானம் செய்தனர். தொடர்ந்து போலீசாரை மிரட்டிய சீனிவாசன் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு சமாதானம் ஆனார். அவரிடம் இருந்த 2 அரிவாளை பறிமுதல் செய்த போலீசார் சீனிவாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்