தாறுமாறாக ஓடிய கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் என்ஜினீயர் உயிரிழப்பு...!

பள்ளிக்கரணையில் தாறுமாறாக ஓடிய கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் என்ஜினீயர் உயிரிழந்து உள்ளார்.

Update: 2022-03-10 13:00 GMT
ஆலந்தூர்,

திருச்சியை சேர்ந்தவர் முகுந்தன் (வயது 24).  இவர் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து உள்ளார். இவர் நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் பகுதியில் ஒரு வீடு வாடகை எடுத்து தங்கியிருந்து வேலை தேடி வந்து உள்ளார். இவருடன் நண்பர் சிவகுமார் தங்கி இருந்து உள்ளார். 

இந்த நிலையில் இன்று அதிகாலை சிவகுமார் வெளிநாடு செல்வதற்காக புறப்பட்டு உள்ளார். அவரை முகுந்தன் விமான நிலையம் வரை காரில் அழைத்துச் சென்று உள்ளார்.  பின்னர் அவரை வழி அனுப்பி வைத்துவிட்டு காரில் முகுந்தன் வீடு திரும்பி உள்ளார். 

கார் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி சாலையில் வரும் போது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த முகுந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அறிந்த பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காருக்குள் சிக்கி இருந்த முகுந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்