5 மாநில தேர்தல் முடிவுகள்: டி.டி.நியூஸ் சேனலில் இன்று நேரடி ஒளிபரப்பு
டி.டி.நியூஸ் சேனலில் 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று நேரடி ஒளிபரப்பாகிறது.;
சென்னை,
மத்திய அரசின் பத்திரிகை தகவல் அவலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொதுத்துறை ஒலிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் செய்தி பிரிவுகளான டி.டி.நியூஸ் மற்றும் அகில இந்திய வானொலி செய்தியில் 5 மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தினமான 10-ந் தேதி (இன்று) தேர்தல் முடிவுகளை வினாடிக்கு வினாடி புதிதாக கிடைக்கும் முடிவுகளை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், அரசியல் நிபுணர்கள் பங்கேற்கும் விவாத நிகழ்ச்சிகளும், இன்று காலை 7 மணி முதல் டி.டி.நியூஸ் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது.
அகில இந்திய வானொலியின் செய்தி பிரிவும், இன்று காலை 7 மணி முதல் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய வானொலியின் எப்.எம்.கோல்டு, எப்.எம் ரெயின்போ, விவித் பாரதி மற்றும் அகில இந்திய வானொலியின் பிற உள்ளூர் அலைவரிசைகளிலும் தேர்தல் முடிவுகள் ஒலிபரப்பப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.