தேனி: வனப்பகுதியில் கால்நடைகள் மேச்சலுக்கு தடை; விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

சென்னை ஐகோர்ட், வனப்பகுதியில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு தடைவிதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-03-09 08:30 GMT
தேனி,

சென்னை ஐகோர்ட் கடந்த 4-ந்தேதி அளித்த தீர்ப்பில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளுக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு கால்நடை வளர்ப்போருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஐகோர்ட்டின் இந்த உத்தரவை நிறுத்தி வைக்கவும், இந்த வழக்கில் உடனடியாக மேல்முறையீடு செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் இன்று ஆர்ப்பாட்டம் செய்னர். இந்த ஆர்ப்பாட்டத்தை கர்னல் ஜான் பென்னிகுயிக் பாரம்பரிய மலைமாடுகள் வளர்ப்போர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆகியவை ஒருங்கிணைப்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். கோரிக்கை அட்டைகளை கையில் எந்தியபடி விவசாயிகள், நாட்டுமாடு நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் பலர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்