தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழந்து இன்று காலை மேலும் வழுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்க கூடும்.
இதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை முதல் 10-ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.