ஆன்லைன் வகுப்பால் நடந்த விபரீதம்; மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது..!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

Update: 2022-03-06 05:58 GMT
குழித்துறை,

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு ஆன்லைன் வகுப்புக்காக பெற்றோர்கள் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர்.

இந்த செல்போன் மூலம் மாணவி ஆன்லைன் வகுப்புகளில் படித்து வந்துள்ளார். அப்போது சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த கலையரசன்( வயது 24 ) என்பவருடன் மாணவிக்கு தொடர்பு ஏற்பட்டு உள்ளது. 

இதனை தொடரந்து இருவரும் வாட்ஸ் அப் மூலம் பேசி வந்துள்ளனர். பின்னர் மாணவிக்கு ஆசைவார்தை குறி உன்னை நேரில் பார்க்க வேண்டும் என்று கலையரசன் தெரிவித்துள்ளார்.

இதனை உண்மை என்று நம்பி மாணவியும் சம்மதம் தெரிவித்து உள்ளார்.  இதனை தொடர்ந்து மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் கலையரசன் ஒரு அறை எடுத்து தங்கியுள்ளார். பின்னர் மாணவியை தொடர்பு கொண்டு இந்த அறைக்கு வரும்படி கலையரசன் தெரிவித்துள்ளார். விடுதிக்கு வந்த மாணவியை கலையரசன் பாலியல் வன்கொடுமை செய்தள்ளார்.

கலையரசன் மார்த்தாண்டத்துக்கு வரும்போது எல்லாம் இதே போன்று மாணவிக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்து உள்ளார். இந்த நிலையில் நேற்று கன்னியாகுமாரி வந்த கலையரசன் மாணவியின் வீட்டுக்கே சென்று உள்ளார்.  அங்கு தனியாக இருந்த மாணவியை கலையரசன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர் வீட்டை விட்டு வெளியே செல்வதற்காக கலையரசன் சுவர் ஏறி குதித்து உள்ளார். இதனை கண்ட அப்பகுதியினர் திருடன் என்று நினைத்து கலையரசனை துரத்திப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

அப்போது நடந்த சம்பவத்தை கலையசரன் தெரிவித்ததை தொடர்ந்து அவரை மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கலையரசன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் செய்திகள்