ஷேன் வார்னே மறைவு- முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்

ஷேன் வார்னே மரணத்திற்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-04 15:33 GMT
சென்னை,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் சுழல் பந்து வீச்சில் தனி முத்திரை பதித்தவருமான ஷேன் வார்னே இன்று காலமானார்.

தாய்லாந்தில் அவரது பங்களாவில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 52. இவரது மரணம் கிரிக்கெட் உலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் இவரது மரணத்திற்கு முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னேவின்  திடீர் மரணம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். "அவர் சீக்கிரம் மரணம் அடைந்து விட்டார்" என சொல்வதற்கு கடினமாக உள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், கிரிக்கெட் உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்