தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகருகிறது: வங்கக்கடலில் வலுப்பெறும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (வெள்ளிக்கிழமை) வலுப்பெறுகிறது.;
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைக்கொண்டு இருக்கிறது. அந்த தாழ்வு மண்டலம் இன்று (வெள்ளிக்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், பின்னர் அது இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நாளை (சனிக்கிழமை) நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார்.
கன முதல் மிக கனமழை
அதன்படி, இன்று கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகதென் மேற்கு, மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 70 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மேற்சொன்னபகுதிகளுக்கு இன்றும், நாளையும் செல்ல வேண்டாம் என்றும், நாளை மறுதினம் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு மட்டும் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.