மனதிற்கு உகந்த நண்பர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து - கமல்ஹாசன்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-01 06:51 GMT
சென்னை,

தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மு.க.ஸ்டாலினுக்கு அரசியல், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்த நாளையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

“மனதிற்கு உகந்த நண்பர், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் காண்கிறார். எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து, தன் எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டிச் செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்து. நீடு வாழ்க” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்