மிட்டாய் வாங்க சென்ற 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பெட்டிக் கடைக்காரர் கைது
பெட்டி கடைக்கு மிட்டாய் வாங்க சென்ற 4 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த பெட்டிக் கடைக்காரரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி,
திருக்கோவிலூர் அருகே உள்ள திருவரங்கம் கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுமி அதே ஊரில் பெட்டிக்கடை வைத்திருக்கும் ஜோதிலிங்கம் வயது (58) என்பவரின் கடைக்கு மிட்டாய் வாங்க சென்றிருக்கிறார். அப்போது கடையில் இருந்த ஜோதிலிங்கம் மிட்டாய் வாங்க வந்த சிறுமியை கடையின் உள்ளே அழைத்து பாலியல் சீண்டல் செய்ததாக தெரிகிறது.
இதில் வலிதாங்காமல் சிறுமி சத்தம் போட்டிருக்கிறார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி சிறுமியை மீட்டனர். இதுகுறித்து சிறுமியின் தாய் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் இளவழகி கடைக்காரர் ஜோதிலிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் மணலூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.