குடி போதையில் தாயை கொன்ற மகன் கைது...!
குடி போதையில் தாயை கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
எட்டயபுரம்,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கன்னிமார் கூட்டம் பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவரின் மனைவி மூக்கம்மாள்.
கணவர் மாடசாமி இறந்த நிலையில் மூக்கம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இவர்களின் மகன் கணேசன் (வயது49) கோவில்பட்டி அருகே வசித்து வருகிறார்.
கணேசன் கோவில்பட்டியில் இருந்து அவ்வப்போது தனது தாய் மூக்கம்மாளை பார்ப்பதற்கு வருவதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் தாய் மூக்கம்மாள் வீட்டுக்கு கணேசன் மது போதையில் வந்துள்ளார். அங்கு இருந்த மூக்கம்மாளிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு உள்ளார். ஆனால் அவர் தர மறுத்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கணேசன் தாய் மூக்கம்மாளை தள்ளிவிட்டுள்ளார்.
இதில் கீழே விழுந்த மூக்கம்மாள் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனைப் பார்த்த கணேசன் யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்
இந்த நிலையில் மூக்கம்மாள் வெகு நேரமாக வெளியே வராததை கண்ட அப்பகுதியிர் வீட்டுக்குள் சென்று பார்த்து உள்ளார்.
அப்போது மூக்கம்மாள் இறந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர் இது தொடர்பா அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மூக்கம்மாளின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
மூக்கம்மாளை கொலை செய்தது அவரது மகன் கணேசன் என்பதை அறிந்த போலீசார் அவரை தீவிரமா தேடி வந்தனர். இந்த நிலையில் தற்போது அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.
குடி போதையில் மகனே தாயை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.