மேலும் 14 பேருக்கு கொரோனா

புதுவையில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

Update: 2022-02-25 18:43 GMT
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,689 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 14 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. அதில் 12 பேர் புதுச்சேரியையும், 2 பேர் ஏனாமையும் சேர்ந்தவர்கள் ஆவர். காரைக்கால், மாகியில் புதிதாக பாதிப்பு ஏதும் இல்லை. தற்போது ஆஸ்பத்திரிகளில் 19 பேர், வீடுகளில் 189 பேர் என 202 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 39 பேர் குணமடைந்தனர். புதுவையில் தொற்று பரவல் 0.83 சதவீதமாகவும், குணமடைவது 98.70 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 349 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 2 ஆயிரத்து 524 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 42 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 15 லட்சத்து 85 ஆயிரத்து 584 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்