சத்தியமங்கலம் நகராட்சியில் கவனம் ஈர்த்த பெண்கள்; 17 வார்டுகளில் வெற்றி பெற்று அசத்தல்
ஈரோடு சத்தியமங்கலம் நகராட்சியில் 17 வார்டுகளில் பெண்கள் வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோட்டில் திமுக கூட்டணி 18 வார்டுகளிலும், அதிமுக கூட்டணி 4 வார்டுகளிலும், பாஜக 2 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. ஒரு வார்டில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.
இதற்கிடையில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் பெண் வேட்பாளர்கள் 17 பேர் வெற்றி பெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட வார்டுகளில் மட்டுமல்லாமல், பொது வார்டுகளிலும் பெண்களே வெற்றி பெற்று அசத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.