தண்டவாள இணைப்பு பணி: தென்மாவட்ட ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

தண்டவாள இணைப்பு பணிக்காக தென்மாவட்ட ரெயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Update: 2022-02-21 23:38 GMT
மதுரை, 

தென்னக ரெயில்வேயின் திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட வள்ளியூர் - ஆரல்வாய்மொழி ரெயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை அகலப்பாதையின் இணைப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக, அந்த பகுதியில் இருந்து மதுரை வழியாக இயக்கப்படும் தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

அதன்படி, திருச்சியில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண். 22627/22628) வருகிற 4-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை இரு மார்க்கங்களிலும் நெல்லை வரை மட்டும் இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவில் வரை இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16191) வருகிற 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரையிலும், மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக தாம்பரம் செல்லும் ரெயில் (வ.எண்.16192) வருகிற 4-ந் தேதி முதல் 13-ந் தேதி வரையிலும் நெல்லை வரை மட்டும் இயக்கப்படும். அ

தேபோல, வருகிற 6-ந் தேதி புதுச்சேரியில் இருந்து மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும் புதுச்சேரி - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (வ.எண்.16861) மற்றும் வருகிற 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் புதுச்சேரி எக்ஸ்பிரஸ் (வ.எண்.16862) ஆகியன நெல்லை வரை மட்டும் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்