திருவான்மியூர் வாக்குச்சாவடியில் ரகளை - இருவர் கைது

வாக்கு இயந்திரத்தை உடைத்த விவகாரத்தில் திமுக பிரமுகர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-02-21 04:47 GMT
சென்னை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நடந்து முடிந்தது. திருவான்மியூர் ஓடைக்குப்பம் 179 வது வார்டு பகுதியில் அதிமுக ஜமுனா கணேசனும், திமுக வேட்பாளராக கயல்விழி என்பவரும் போட்டியிட்டனர். இந்த வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை திமுக பிரமுகர் சேதப்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில், அதற்கான வீடியோவும் இணையத்தில் வைரலானது.

இதுகுறித்து திருவான்மியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் விசாரணை துவங்கிய நிலையில் கதிரவன் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவரும் தலைமறைவாகினர். இதையடுத்து தலைமறைவான திமுக நிர்வாகி உட்பட இருவரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர் . அரசாங்க சொத்தை சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் கதிரவன், செல்வம் ஆகியோரை போலீசார் கைது  செய்தனர்.

மேலும் செய்திகள்