நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றது: டிஜிபி சைலேந்திர பாபு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என 648 நகர்ப்புறஉள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. கொரோனா பாதித்தவர்களுக்காக மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர் வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றதாக டிஜிப் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். மேலும், “ ஒரு சில இடங்களிலும் சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் விரைந்து சரி செய்யப்பட்டது எனவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டதால் வன்முறை தவிர்க்கப்பட்டது. சில நிகழ்வுகள் குறித்து தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனவும் டிஜிபி தெரிவித்துள்ளார்.