திருவொற்றியூர்; 2 வாக்குப்பதிவு எந்திரங்களும் கோளாறு- தேர்தல் அதிகாரிகளிடம் சண்டையிட்ட அரசியல் பிரமுகர்கள்
இரண்டு வாக்குப்பதிவு எந்திரங்களிலும் கோளாறு ஏற்ப்பட்டதால் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் அரசியல் பிரமுகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
சென்னை திருவொற்றியூர் நகராட்சி 12-வது வார்டின் வாக்குச்சாவடி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ளது.
இந்த வாக்குச் சாவடியில் 140 வாக்குகள் பதிவாகியிருந்த போது வாக்குப்பதிவு எந்திரம் கோளாறானது. பின்னர் மாற்று வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு வரப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வந்தது.
அப்போது 36 வாக்குகள் பதிவான நிலையில் அந்த எந்திரமும் பழுதாகியது. இரண்டு வாக்குப்பதிவு எந்திரங்களும் பழுதானதால் வாக்குச்சாவடியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
பின்னர் மூன்றாவதாக கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்தனர்.
வாக்குப்பதிவு எந்திரத்தின் தொடர் கோளாறு காரணமாக வாக்களிக்க வந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இந்த நிலையில் முதல் இரண்டு வாக்குப்பதிவு எந்திரத்திரங்களில் பாதிவான வாக்குகளை எப்படி எடுப்பிர்கள் என்று கேள்வி எழுப்பிய அரசியல் கட்சியினர், இந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
இதனால் அந்த வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.