அம்மாபேட்டை பேரூராட்சி திமுக வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழப்பு....!- வீடியோ

ஈரோடு அம்மாபேட்டை பேரூராட்சி 2வது வார்டு திமுக வேட்பாளர் சித்துரெட்டி மாரடைப்பால் இன்று உயிரிழந்துள்ளார்.;

Update:2022-02-17 10:27 IST
ஈரோடு,

தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிய உள்ள நிலையில் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். வேட்பாளர்களும் வீடு வீடாக ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சியின் 2-வது வார்டில் திமுக சார்பில் சித்துரெட்டி என்பவர் போட்டியிடுகிறார். வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நேற்று இரவு பிரச்சாரம் முடித்து விட்டு வீட்டில் தூக்கி கொண்டிருந்த சித்துரெட்டிக்கு இன்று அதிகாலை நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் பூதப்பாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதன் பின்னர் உடல்நிலை மிகவும் மோசமானதால், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே சித்துரெட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

திமுக வேட்பாளர் சித்துரெட்டி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அம்மாபேட்டை பேரூராட்சி 2வது வார்டுக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று அத்தாணி பேரூராட்சி 3வது வார்டு திமுக வேட்பாளர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒரு திமுக வேட்பாளர் உயிரிழந்து இருப்பது திமுகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்