தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

புத்தூரில் வட்டார அளவிலான தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

Update: 2022-02-16 19:17 GMT
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கொள்ளிடம் வட்டார அளவிலான தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. வட்டாரக் கல்வி அலுவலர்கள் சீனிவாசன், சரஸ்வதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வட்டார அளவிலான அனைத்து தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 
கூட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடநூல்கள், குறிப்பேடுகள், சீருடைகள், இலவச நலத்திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு சேர்ந்துள்ளதா? என்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு தமிழ் பாடத்தில் அடிப்படை கல்வி எழுத்துக்கள் அறிமுகம், எழுத்துக்களை கூட்டி வாசிக்கும் திறன், வார்த்தையின் பொருள் போன்றவையில் இருந்து கற்றல், கற்பித்தல் பணி தொடங்கப்பட வேண்டும். மாணவர்களின் பதிவுக்கு ஏற்ப வருகை உறுதி செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்