வரும் 19-ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - தமிழக அரசு
50% ஆசிரியர்கள் உள்ளாட்சித் தேர்தல் பணிக்கு சென்றதால் அந்த பள்ளிகளுக்கு மட்டும் பிப்.18ஆம் தேதியும் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.;
சென்னை,
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. எனவே தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெற உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் 50%க்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு சென்றால், அந்த பள்ளிகளுக்கு மட்டும் பிப்.18ஆம் தேதியும் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிப்.19 ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.