குற்றவாளிகளுடன் போலீசார் தொடர்பு போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

குற்றவாளிகளுடன் தொடர்பில் இருக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் எச்சரித்தார்.

Update: 2022-02-12 15:58 GMT
வில்லியனூர்
குற்றவாளிகளுடன் தொடர்பில் இருக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் எச்சரித்தார்.

நல்லுறவு கூட்டம்

புதுச்சேரி மேற்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலக எல்லைக்குட்பட்ட வில்லியனூர், மங்கலம், நெட்டப்பாக்கம், திருபுவனை, திருக்கனூர், காட்டேரிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த போலீசார் நல்லுறவு கூட்டம் வில்லியனூர் சுல்தான்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் தலைமை தாங்கினார்.
இதில் வில்லியனூர் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், ராமு, திருக்கனூர் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், திருபுவனை இன்ஸ்பெக்டர் சங்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜன், கணேசன், வேலு, சரண்யா, கதிரேசன் உள்பட 40-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். 
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் பேசியதாவது:-

கடும் நடவடிக்கை

மேற்கு பகுதிகளில் ரவுடிகள் அட்டகாசத்துடன் கஞ்சா விற்பனையும் அதிகரித்துள்ளது. இவற்றை ஒழிக்க போலீசார் விழிப்புடன் செயல்பட வேண்டும். குற்றவாளிகளுடன் போலீசார் தொடர்பில் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கு பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். குற்றச்செயல்கள் நடக்கும் முன் அதனை தடுத்து நிறுத்த வேண்டும். பொதுமக்களிடம் நல்லுறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்