மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார் கைது
பெருந்துறை அருகே மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு
பெருந்துறை பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 58). இவர் அதே பகுதியில் கடை வைத்து செருப்பு தைத்து வருகிறார். இவருடைய மகனும், மருமகளும் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆயத்த ஆடை நிறுவனங்களில் தையல் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் கடந்தும் குழந்தை இல்லை.
இந்தநிலையில் சேகர் மருமகள் வீட்டில் தனியாக இருக்கும் நேரங்களில் அவருக்கு பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி கணவரிடம் அந்த பெண் கூறினார். உடனே மகன் இதுபற்றி சேகரிடம் கேட்டபோது நான் விளையாட்டாக செய்தேன் என்று பதில் சொல்லியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் இதுகுறித்து பெருந்துறை போலீசில் புகார் அளித்தார். அதனபேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தார்கள்.
பின்னர் பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். இதையடுத்து மாஜிஸ்திரேட்டு் சபினா குற்றம் சாட்டப்பட்ட சேகரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்