திருபுவனை திருவண்டார்கோவிலில் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம் 4 வழிச்சாலை விரிவாக்கம் விறுவிறுப்பு

புதுச்சேரி-விழுப்புரம் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணியில் திருபுவனை, திருவண்டார்கோவிலில் 2 மேம்பாலங்கள் அமைக்கப் படுகின்றன.

Update: 2022-02-08 17:59 GMT
திருபுவனை
புதுச்சேரி-விழுப்புரம் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணியில் திருபுவனை, திருவண்டார்கோவிலில் 2 மேம்பாலங்கள்   அமைக்கப் படுகின்றன.

முழு வீச்சில் பணிகள்

புதுச்சேரி-விழுப்புரம் இடையே நாளுக்கு  நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதனால் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி அடிக்கடி விபத்துகளும் அரங்கேறி வருகின்றன. இதையடுத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வழியாக நாகப்பட்டினம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது.
இதற்காக கண்டமங்கலம், திருபுவனை, திருபுவனை பாளையம், அரியூர், திருவண்டார்கோவில், மதகடிப்பட்டு, கெங்கராம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

2 மேம்பாலங்கள்

மழைநீர் தேங்காதவாறு 2 பக்கமும் கழிவுநீர் வாய்க்கால்களுடன் சாலை அமைக்கப் படுகிறது. மழைநீர் செல்லும் வகையில் சாலையின் குறுக்கே பல்வேறு இடங்களில் சிறிய பாலங்களும் அமைக்கப்படுகின்றன.
இந்தநிலையில்   திருபுவனை,  திருவண்டார் கோவில் ஆகிய பகுதிகளில் கிராமப்புற சாலைகளை இணைக்கும் வகையில் 2 மேம்பாலங்கள் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளில் இரவு, பகலாக தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. 
இந்த 4 வழிச்சாலை பயன்பாட்டுக்கு  வரும்  போது புதுச்சேரி-விழுப்புரம் இடையே போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.
---

மேலும் செய்திகள்